கல்விச் சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 14, 2015

கல்விச் சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்கப்பட உள்ளது.
132 இடங்களில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாம்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமின்றி சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித அப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் முகாமை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி திங்கள்கிழமை காலை தொடங்கிவைக்க உள்ளார்.

No comments:

Post a Comment