சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 22, 2015

சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா

சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் அனைத்து கட்சிகளின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஜோதி சிங் 6 பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி தில்லி மேல்–சபையில் இன்று அம்மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் சிறார்களின் தண்டனை வயது 18 லிருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment