ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு ஜனவரி, 11 முதல், ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கிறது.
போகி பண்டிகை தினமான ஜனவரி, 14ம் தேதி, 6, 7ம் வகுப்புகளுக்கும் ஆங்கிலத்தேர்வு நடக்கிறது. கன மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி, 11 முதல், 23 ம் தேதி வரை நடத்த, பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், அந்தந்த மாவட்டங்களே, நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான, இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி, 11ம் தேதி துவங்கி, ஜனவரி, 27ம் தேதி முடிவடைகிறது. போகி பண்டிகை தினமான, ஜனவரி, 14ம் தேதி, ஆறு மற்றும், ஏழாம் வகுப்புகளுக்கும் ஆங்கில தேர்வு நடக்கிறது.
ஏற்கனவே, பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது, ஆறு, ஏழு வகுப்புகளுக்கும், தேர்வு நடத்துவதால், நடுநிலைப்பள்ளிகளும் அன்று விடுமுறை அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment