தத்கல்' கட்டணம் நாளை முதல் உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 24, 2015

தத்கல்' கட்டணம் நாளை முதல் உயர்வு

'தத்கல்' டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம், 10 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது; நாளை முதல் இந்த கட்டண உயர்வு அமலாகும்.

திடீரென ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஏற்கனவே தத்கல் முன்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நாளை முதல் மீண்டும், 10 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தி, இந்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வகுப்பு / பழைய கட்டணம் (ரூபாயில்) /புதிய கட்டணம் (ரூபாயில்) /குறைந்தபட்ச துாரம் (கி.மீ.,)
இரண்டாம் வகுப்பு இருக்கை /10 - 15 /மாற்றமில்லை / 100
இரண்டாம் வகுப்பு படுக்கை / 90 - 175 / 100 - 200 /500
ஏ.சி., இருக்கை /100 - 200 /125 - 225 / 250
ஏ.சி., மூன்றடுக்கு / 250 - 350 / 300 - 400 / 500
ஏ.சி., இரண்டடுக்கு /300 - 400 / 400 - 500 / 500
எக்சிகியூட்டிவ் /300 - 400 /400 - 500 / 250

No comments:

Post a Comment