மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 27, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி : தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி :

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களின் பட்டியலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக விவகாரமும் இடம்பெற்றது. அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 

பயனாளிகள் :


பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு 2016 ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது உயர்த்தப்பட உள்ள அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் இல்லாமல் 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கேட்டுள்ளன.

No comments:

Post a Comment