புதிய உலக சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 30, 2016

புதிய உலக சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ !!

உலக வரலாற்றிலேயே அதிக செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் அனுப்பும் புதிய சாதனையை இஸ்ரோ விரைவில் நிகழ்த்த உள்ளது. 2017-ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று ஒரே நேரத்தில் 82 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

இஸ்ரோ சாதனை :

இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ள 82 செயற்கைகோள்களில் 60 அமெரிக்காவையும், 20 ஐரோப்பாவையும்
, 2 இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை அனுப்பியது தான் இதுவரை மிகப் பெரிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை இஸ்ரோ தகர்க்க உள்ளது. 2016ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி 20 செயற்கைகோள்களை அனுப்பியது தான் இதற்கு முன் இந்தியா, ஒரே நேரத்தில் அதிக செயற்கைகோள்களை அனுப்பியது.
25 நிமிடத்தில் நிலைநிறுத்தம்:

தற்போது ஏவப்பட உள்ள 82 செயற்கைகோள்களும் மண்ணில் இருந்து புறப்பட்ட 20 முதல் 25 நிமிடங்களில் சூரிய ஒளிவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன. 20 நிமிடங்களில் இந்த செயற்கைகோள்கள் 580 கி.மீ., தூரம் பயணிக்க உள்ளன. 2020ம் ஆண்டு மிக குறைந்த செலவில் செவ்வாய்க்கு இரண்டாவதாக எம்ஓஎம் - 2 என்ற செயற்கைகோளை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment