பொறியியல் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 30, 2016

பொறியியல் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய பொறியியல் பணியிட தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 3-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொறியியல் பணியில் (இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீஸ்) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி போட்டித் தேர்வை நடத்த உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 26 என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண் ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

எனவே, பிஇ, பிடெக் பட்டதாரிகள் பொறியியல் பணி தேர்வுக்கு நவம்பர் 3-ம் தேதி வரை ஆன்லைனில் (www.upsconline.nic.in) விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment