தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மையம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 30, 2016

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.தென்மேற்கு பருவமழை விலகிக் கொண்டதையடுத்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவில்லை. இதனால் பருவமழை தாமதமானது.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. அதற்கான அறிகுறிகள் நேற்று தெரிந்தன. தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் லேசான மழைத் தூரல்களும் காணப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment