உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 24, 2016

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, அவற்றின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் மேயர்கள்-மாமன்ற உறுப்பினர்கள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12, 524 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள்- உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் (அக்டோபர் 24) முடிவடைகிறது.

இதையடுத்து, தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்டம்: முன்னதாக, அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், பழங்குடியினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.

இதன்படி, புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment