அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 23, 2016

அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம்

 இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 
மத்திய அரசின் 2022க்குள் 100 சதவிகித தூய்மை திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் அனைத்து ரயில்களிலும் பயோ டாயலட் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு 1,155 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக ரயில்வே போர்டு சேர்மன் ஏ.கே.மிட்டல் தெரிவித்துள்ளார். 


அனைத்து ரயில்களிலும்


சென்ற புதனன்று டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 2019ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் பொருத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார். 


பயோ டாய்லெட்டின் பயன்கள்


தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழக்கமான டாய்லெட்டை காட்டிலும் பல வசதிகள் புதிதாக நிறுவப்பட உள்ள பயோ டாய்லெட்டில் கிடைக்கும். இவ்வகை டாய்லெட்டுகளை நிறுவ குறைந்த இடமே தேவைப்படும். இவற்றால் தண்ணீர் செலவு கிடையாது. 50 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பராமரிப்பு தேவைப்படும். கழிவுகள் சுத்தமாக மக்கி விடுவதால் துர்நாற்றம் ஏற்பட வழியில்லை. 


துர்நாற்றம் ஏற்படுவதாக புகார்


புதிதாக பயோ டாய்லெட் இணைக்கப்பட்ட ரயில்களில் துர்நாற்றம் அடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.டாய்லெட்டுகளை பராமரிப்பதில் அதிக கவனம் எடுக்க வேண்டும் மக்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment