பதிவு செய்யாவிட்டாலும் பொருள் வினியோகம் நிறுத்தப்படாது: ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு இல்லை; தமிழக அரசு அறிவிப்பு
பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருள்கள் நகர்வு செய்து முடிக்கப்படவேண்டுமென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதை சரிபார்ப்பதற்காக சென்னையில் உள்ள சில ரேஷன் கடைகளுக்குச் சென்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ரேஷன் அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யப்பட்டது.காலநிர்ணயம் இல்லை
பின்னர் பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், ‘‘ஆதார் அட்டை பதிவுகள் மேற்கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படமாட்டாது. இதற்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது’’ என்றும் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விரைவாக தரமுடியும்
இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை மட்டும் ரேஷன் அட்டையுடன் இணைத்தால் போதும் என்று பலரும் தவறான நினைக்கின்றனர். ஆனால் அந்த ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் தகவலும் அளிக்கப்பட வேண்டும்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆதார் தகவல்களை கொடுத்தால்தான் எங்களால் ஸ்மார்ட் அட்டைகளை மக்களுக்கு விரைவாக வழங்க இயலும்.தமிழகத்தில் 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரேஷன் அட்டைகள் பதிவு உள்ளன. அவற்றில், 4.52 கோடி நபர்கள் மட்டுமே அவர்களின் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். ஒரு கோடியே 58 லட்சம் பேர் தங்கள் செல்போன் எண்களை இணைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment