தமிழகத்தில் நாளை (அக்.30) வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு ‘கியாந்த்’ என பெயரிடப்பட்டது. பின்னர் திசை மாறிய இப்புயல் மத்திய மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்தது.
நேற்று முன்தினம் வலு விழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. நேற்று மேலும் வலு விழந்து குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதியாகி விட்டது. தமிழகத்தில் இன்று பரவலாக லேசான மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட் டங்களில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் உள் தமிழகத்தில் ஆங்காங்கே மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். நாளை சற்று பலத்த மழை பெய்யும். அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக் கிறது. நவம்பர் 6, 7 தேதி களில் பருவமழை தீவிர மடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறிவிட்ட ‘கியாந்த்’ புயல், இப்போது மசூலிப் பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதிக்குள் வறண்ட காற்று நுழைந்துவிட்டதால் மழை மேகங்களை உருவாக்க முடிய வில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment