2 நாட்கள் எஸ்.எஸ்.ஏ., பயிற்சி, மானவர்கள் நலன் கருதி பயிற்சி குறைப்பா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 27, 2016

2 நாட்கள் எஸ்.எஸ்.ஏ., பயிற்சி, மானவர்கள் நலன் கருதி பயிற்சி குறைப்பா

காரைக்குடி:அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், கடந்த ஆண்டு மாதம் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை இரண்டு பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மூலம்,
ஆண்டுதோறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார, குறுவள அளவில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பங்கேற்பது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கடமையாகும். மாதம் ஒரு நாள் என ஆண்டுக்கு 10 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்காமல், விடுமுறை எடுத்ததால், கடந்த ஆண்டிலிருந்து பயிற்சியில் பங்கேற்கும் நாட்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஆண்டுக்கு 12 நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது. இதனுடன் ஈடு செய் விடுப்பு 10 நாள் வழங்கப்படுவதால், மாணவர்களில் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கல்வியாண்டியில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை இரண்டு நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பயிற்சி நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஈடு செய் விடுப்பு எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக எஸ்.ஏ.ஏ., சார்பில் பயிற்சி நாட்களை குறைத்திருக்கலாம். அதுமட்டுமன்றி இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடை பொறுத்துதான் பயிற்சி நாட்கள் அதிகரிக்கும். 10 ஆண்டுக்கான திட்டம் 14 ஆண்டை தாண்டியும் செயல்படுத்தப்பட்டு வருவதால், இதற்கான நிதி ஆதாரங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு வருகிறது. அதனால், பயிற்சி நாட்களை குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் நிதி மொத்தமாக விடுவிக்கப்பட்டால், ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி என்ற நடைமுறையை எஸ்.எஸ்.ஏ., பின்பற்றும். அவ்வாறு பயிற்சி வழங்கினால், அந்த ஈடு செய் விடுப்பை ஆசிரியர்களால் எடுக்க முடியாது, என்றார்.

No comments:

Post a Comment