அக மதிப்பென்கள்(10)
10 மதிப்பெண்களையும்
அனைவரும் பெற்றிட நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது
1) 85 .01 க்கு மேல் வருகை பதிவு சதவீதம் இருந்தால்தான் நம்மால் 3 முழு மதிப்பெண்ணை வழங்க இயலும்.
அதாவது
தோராயமாக வருடத்திற்கு 25 நாட்களுக்கு மேல் விடுப்பில் சென்றால்
நம்மால் 3 மதிப்பெண்ணை வழங்க இயலாது.
2)உள்நிலைத் தேர்வுகள் (5 மதிப்பெண்கள்)
குறைந்த்து 4 தேர்வுகள் ஒவ்வொரு தேர்வுக்கும் அதாவது அடுத்தடுத்த கணித உள்நிலைத் தேர்வுக்கு குறைந்து 10 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தி அதில் சிறந்த 3 தேர்வுகளின் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக 25 மதிப்பெண் தேர்வை வைத்தால் கூடுதல் 75 க்கு 69க்கு மேல் எடுத்தால்தான் 69/75 *5= 4.6 என வரும், அப்பொழுது தான் 5 முழு மதிப்பெண்கள் வழங்க இயலும்.
3)]ஒப்படைவுக்கு (2 மதிப்பெண்)
குறைந்த்து 3 நடத்தி சிறந்த 1 எடுத்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக
25மதிப்பெண் ஒப்படைவுக்கு தந்தால்
20 க்கு மேல் பெற்றால் தான் 20/25*2=1.6 , எனவே 2 மதிப்பெண் பெற இயலும்.
நிறைவாக
1. கல்வியாண்டில் 20 நாட்களுக்கு மேல் absent ஆக கூடாது.
2. உள்நிலை தேர்வுகளில் மொத்தம் 75 க்கு 69 க்கு மேல் எடுக்கபட வேண்டும்.
3. ஒப்படைவில் 25 க்கு 20க்கு மேல் எடுக்கப்பட வேண்டும்.
முக்கிய குறிப்பு.
உள்நிலைத் தேர்வுகள்,
ஒப்படைவுகள் கடைசியல் மாணவர் கையொப்பம்.
மதிப்பெண் வழங்கிய பிறகு கட்டாயம் ஆசிரியரின் கையொப்பம் இருக்க வேண்டும்.இதை விடைத் தாள்கள், ஒப்படைவுகள் 12 ஆம் வகுப்பு முடிந்து 6 மாதங்கள் வரை த.ஆ வசம் ஒப்படைத்து பத்திரப் படுத்தி வைக்க வேண்டும்.
இவை அனைத்தும் நிகழ்ந்தால் மட்டுமே முழு 10 மதிப்பெண்கள்
கிடைக்கும்.
பொதுத்தேர்வில் 25 எடுத்து இதில் 9 எடுத்து மொத்தம் 34 என தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment