5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவ மருந்து வழங்கும் மருத்துவ முகாம்: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 18, 2018

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவ மருந்து வழங்கும் மருத்துவ முகாம்: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவ மருந்து வழங்கும் முகாம் நாளை (பிப்.19) தொடங்குகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் ‘ஏ’ விளங்குகிறது. வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்குவதன் மூலம் பார்வையின்மை தடுக்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு தேசிய வைட்டமின் ‘ஏ’ குறை பாடு தடுப்புத் திட்டம் முதன்முதலில் 1970-ம் ஆண்டு 7 மாநிலங்களில் தொடங்கப்பட்டது. பின் னர் 1975-ம் ஆண்டு இந்தியா முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.
ஆண்டுக்கு 2 முறை
குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின் ‘ஏ’ நுண்ணூட்டச் சத்து 4 மாதங்களில் குறையத் தொடங்கி 6 மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது. எனவே, வைட்டமின் ‘ஏ’ நுண்ணூட்டச் சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை கொடுப்பது அவசியமாகிறது.
மருத்துவ சேவைகள் துறையின்கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் (அங்கன்வாடி) ஆகியவற்றில் நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை 6 நாட்களுக்கு, 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவ மருந்தை வாய் வழியாகக் கொடுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 60 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.
x
x

No comments:

Post a Comment