திவாலானது ஏர்செல்?! 90 நாட்கள் அவகாசம்
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்செல் நிறுவனம், கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் திவாலானதாக மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 15,500 கோடி ரூபாயை செலுத்த முடியாத நிலையில், ஏர்செல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள்வேறு நிறுவனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு Aircel வேண்டுகோள்சேவையில் நாளை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனமே தெரிவித்துள்ளது.செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. பின்னர் ஏர்செல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் பெரு நகரங்களில் உள்ள 75% டவர்கள் தற்காலிகமாக செயல்படத் தொடங்கினாலும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். ஏர்செல் சிக்னல் மீண்டும் நாளை முதல் கிடைக்காது என்பதால், வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்ளலாம் என்றும் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து 90 நாட்களில் செல்போன் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற ஏர்செல் அவகாசம் தர வேண்டும் என சட்டத்தீர்ப்பாயம் கூறியுள்ளதுஇதற்கிடையே வாடிக்கையாளர்கள் MNP மூலமாக வேறு நெட்வொர்க்கிற்கு மாறிகொள்ள TRAI அறிவிப்பு என தகவல் வெளியாகியுள்ன
x
No comments:
Post a Comment