ஆன்ட்ராய்டு பயனர்கள் பலர் குறைந்த வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்திவருகின்றனர். அதாவது RAM, மற்றும் இன்டெர்னல் வசதி குறைவாக உள்ள மாடல்களைப் பயன்படுத்திவருகின்றனர். அவர்களும் புதிய ஆன்ட்ராய்டு ஓ.எஸ்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு கோ என்ற ஓ.எஸ்களை அறிமுகம் செய்துவந்தது. அந்த ஓ.எஸ்கள் குறைந்த வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. அதில் செயல்படுவதற்காக கூகுள் நிறுவனம் தனித்தனி அப்ளிகேஷன்களுக்கும் கோ வெர்ஷன் என்ற ஒன்றினை வெளியிட்டுவந்தது.
அதன்படி கூகுள் அசிஸ்டன்ட் கோ, ஜிபோர்டு கோ, யூ டியூப் கோ, மேப்ஸ் கோ என பல்வேறு அப்ளிகேஷன்கள் இதற்கு முன்னர் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஜிமெயில் கோ என்ற ஒன்றினையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறைந்த மெமரியில் முன்னர் இருந்த ஜிமெயில் போன்றே செயல்படும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது
x
No comments:
Post a Comment