மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 17, 2018

மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன்படி, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்பு, பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பள்ளிகளில் நடமாடும் நுாலகம் மற்றும் புத்தகக் கண்காட்சி, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு சான்றிதழ் என, பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.அதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு என, பிரத்யேகமாக, சிற்றிதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதில், 6 - 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஓவியம், கட்டுரை, கவிதை என, தங்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்தலாம்.இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்கு, பள்ளிக்கல்வித் துறைசமர்ப்பித்து உள்ளது.

No comments:

Post a Comment