குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 12, 2018

குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!

குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!
தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப இன்று காலை (பிப்ரவரி 11) நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 3லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) (494),இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)(4096), இளநிலை உதவியாளர்(பிணையம்)(205), வரிதண்டலர்(கிரேடு 1)(48), நில அளவர்(74), வரைவாளர் (156), தட்டச்சர் (3463), சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)(815) உள்ளிட்ட 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி 2017 நவம்பர் 2ஆம் தேதி அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர். இதில் ஆண் தேர்வர்கள் 9,41,878 பேர், பெண் தேர்வர்கள் 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் 54 பேர், மாற்றுத்திறனாளிகள் 25,906 பேர், ஆதரவற்ற விதவைகள் 7367 பேர், முன்னாள் படைவீரர்கள் 4107 பேர் உள்ளிட்ட 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வுக்கு 1,60,120 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக 508 மையங்கள் அமைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தேர்வு பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 6962 பேர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் 1,03,500 பேர், தேர்வுக்கூட ஆய்வாளர்கள் 6962 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்வைக் கண்காணிக்க 1165 மொபைல் யூனிட்(நகரும் குழுக்கள்) அமைக்கப்பட்டது. அதுதவிர 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. இந்தத் தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.
தேர்வு எழுதுபவர்கள் செல்பேசி, கால்குலேட்டர், புத்தகம், மின்னணு சாதனம், தேர்வுக்கூடத்திற்குக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டது. அனைத்துத் தேர்வுக்கூடங்களின் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரில், 3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்
x

No comments:

Post a Comment