தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. வேலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த இடி இடிக்கிறது. ஆனால் சில இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது.
நேற்று மதுரை, சேலம், வேலூர். கோவை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடி பலத்த மழை பெய்தது.இந்த மழை காரணமாக இன்று வெப்பத்தின் தாக்கம் ஒரளவு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ெவப்பத்தின் தாக்கல் தவித்து வந்த சென்னை வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தர்மபுரியில் 10 மி.மீ, மதுரையில் 28.6 மி.மீ, சேலத்தில் 70.6 மி.மீ, திருத்தணியில் 15 மி.மீ, ஊட்டியில் 35.4 மி.மீ, வேலூரில் 54 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று முதல் 19ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில் வங்க கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருகிறது. இது படிப்படியாக வரும் 18ம் தேதிக்குள் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதை பொறுத்து தமிழகத்தில் 18ம் தேதிக்கு பிறகு அடுத்து வரும் நாட்களில் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
x
No comments:
Post a Comment