மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 9, 2018

மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு

மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு
மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1 புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்துக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 'ப்ளூபிரின்ட்' எனும் தேர்வுக்கு, வழிமுறைகள் எதுவும் வழங்கப்படாமல், புத்தகத்தின் எப்பகுதியிலிருந்தும், சிந்தனைத்திறனை தூண்டும்படி வினாக்கள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பிளஸ் 1 வினாத்தாள் வடிவமைப்பு குறித்த குழப்பம், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இருந்தது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு தயாராவதில், சிக்கல் நிலவியது. தற்போது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்துக்கு, வினாத்தாள் மாதிரிகள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
 என்ற இணையதளத்தில், மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மாணவர்களுக்கு வழங்கி, தேர்வுக்கு தயார்படுத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment