ஆசிரியர்களுக்கு இம்மாதம் முழுவதும் தொடர் பயிற்சி நடத்த திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 10, 2018

ஆசிரியர்களுக்கு இம்மாதம் முழுவதும் தொடர் பயிற்சி நடத்த திட்டம்

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சி துவங்கியது

அரசுப்பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தலை எளிமையாக்க, ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு தோறும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது

நடப்பு கல்வியாண்டு முதல், மாற்றப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.மாணவர்களுக்கு உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டறிவதற்கு, அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது

இத்தேர்வில், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் அளவிடப்படுகிறது. மாணவர்களை இத்தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு 11ம்தேதி முதல் நடக்கிறது

உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களிலும் ஒவ்வொரு மையத்தில் நடக்கிறது

பிளஸ் 1 மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது

பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கவும், பாடவாரியாக, இம்மாதம் முழுவதும் ஆசிரியர்களுக்கு திருப்பூரில் பயிற்சி வகுப்பு நடக்கிறது

No comments:

Post a Comment