இன்று நடக்கவுள்ள அரையாண்டு தேர்வுகள் ரத்தா?! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு !!
இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தேவகோட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக்க வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு உதவி பெறும் நகரத்தார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறை ஒன்றில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு, அந்த அறை பூட்டப்பட்டு இருந்துள்ளது. இரவு அறைக்கதவின் பூட்டை உடைத்து 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு, கணிணி அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்து உள்ளதாகவும், காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, வினாத்தாள் திருடப்பட்டது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடுபோகவில்லை, திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
No comments:
Post a Comment