பட்ஜெட் 2019: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 1, 2019

பட்ஜெட் 2019: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

1) தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2) வருங்கால வைப்பு நிதி மற்றும் சில குறிப்பிட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் 6.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

3) நிரந்தர கழிவுத் தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4) 2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி கிடையாது

5) வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் வருமான வரி விலக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

6) வருமான வரி செலுத்துவோருக்கு 24 மணிநேரத்தில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு தொகை திருப்பிச் செலுத்தப்படும்

7) 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை 3 தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

8) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வுதியம் ரூ. 3,000 வழங்கப்படும்

9) கிராஜூட்டி தொகை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.

10) ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

11) வீடு வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.

01.02.2019| 12:40 PM
வருமான வரி அதிரடி சலுகைகள் அறிவிப்பு

வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு

நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு

ஒட்டுமொத்த வருமா வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

இரண்டு வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும்

வங்கி வட்டியில் இருந்து  வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்

2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை

வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்வு

5 லட்சம் ரூபாய் வரை அனைவருக்கும் வருமான வரி விலக்கு. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகளில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு

01.02.2019| 12:22 PM
மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி செய்து தரப்படும் என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார்.

01.02.2019| 12:02 PM
பியூஷ் கோயல் உரை

பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்

ராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

ராணுவத்தில் ஒரே பணி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆளில்லா லெவல் கிராசிங் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது

01.02.2019| 11:50 AM
மாதம் ரூ.3000: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக புதியபென்ஷன் திட்டம் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

01.02.2019| 11:45 AM
மத்திய அரசில் மீன்வளத்துறை: பியூஷ் கோயல் உரை

 

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை உருவாக்கப்படும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 கோடி பேர் பயன் பெறுவர்

பிஎப் சந்தாதாரர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்வு

கடனை உரிய நேரத்தில் கட்டினால் 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்

மேலும் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்

01.02.2019| 11:35 AM
விவசாயிகளுக்கு ரூ. 6,000 நிதியுதவி: பியூஷ் கோயல் உரை

 
2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

மூன்று தவணையாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கபப்டும்.

01.02.2019| 11:25 AM
மத்திய பட்ஜெட்: பியூஷ் கோயல் உரை

உலகிலேயே வேகமாக வளரும் நாடு இந்தியா

5.45 லட்சம் கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் ஒழிக்கப்பட்டுள்ளது

அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

இந்தியாவில் மார்ச் மாதத்தில் மின்சாரமே இல்லாத வீடுகள் உருவாகும்

01.02.2019| 11:15 AM
பட்ஜெட்: பியூஷ் கோயல் உரை:

கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தம் வெகு வேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கத்துறை சீர்திருத்தங்கள் நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளன.

மக்களின் கனவுகளை நனவாக்கும் திட்டத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது. விலைவாசியை நாங்கள் கட்டுப்படுத்தி இருக்காவிட்டால் குடும்பங்களின் செலவு 40 சதவீதம் வரை உயர்ந்து இருக்கும்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சீர்த்திருத்தச் சட்டம் மிக முக்கிய நடவடிக்கை

மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் சுத்தமான இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வீடுகளுக்கு கழிவறை அமைக்கும் திட்டத்தால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் குறைந்து வருகிறது.

01.02.2019| 11:02 AM
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியைமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. புதிய இந்திய 2022 என்ற இலக்குடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

01.02.2019| 10:47 AM
பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே இடம் பெறும்: காங்கிரஸ் விமர்சனம்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு வெற்று அறிவிப்புகளே அதிகம் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

01.02.2019| 10:40 AM
பங்குச்சந்தைகள் உயர்வு

 
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 422 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 10869 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

01.02.2019| 10:30 AM
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இதனை ரூ.5 லட்சம் வரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பை பொறுத்தவரையில் கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்பட வில்லை.

01.02.2019| 10:20 AM
2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல்செய்கிறார். இதற்காக அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

No comments:

Post a Comment