பிப்ரவரி 1-ம் தேதி முதல் டிவி-க்கான கேபிள், DTH கட்டணங்கள் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் வழக்கமாகக் கிடைக்கும் 60-70 ரூபாய் தற்போது அதிகரித்துள்ளது. புதிய விதிமுறையால் ஒலிபரப்புதாரருக்கு வருமானம் 40% அதிகரித்து ஒரு வாடிக்கையாளர்க்கு 94 ரூபாய் என்ற கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
இதுகுறித்து க்ரிஸில் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இனி மக்கள் டிவி பார்ப்பதற்கான மாதக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய விதிமுறைப்படி 10 சேனல்கள் விரும்பு ஒரு வாடிக்கையாள்ரின் மாதக் கட்டணம் 25% அதிகரித்து 300 ரூபாய் ஆக உள்ளது.
ஆனால், காலப்போக்கில் சந்தை நிலவரம், போட்டி விகிதம், மக்களின் செலவழிக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒலிபரப்புதார்கள் கட்டணங்களை மறுசீரமைக்கும் என்றும் க்ரிஸில் ஆய்வு கூறுகிறது.
No comments:
Post a Comment