எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ‘மே 1’ முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 2, 2019

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ‘மே 1’ முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறையும்.

ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கி அண்மையில் தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை ஆர்பிஐ-ன் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது.

எனவே ஆர்பிஐ எப்போதெல்லாம் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறதோ அதற்கேற்றவாறு எஸ்பிஐ வங்கி சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் தானாகவே மாற்றி அமைக்கப்படும். இந்தப் புதிய விதிமுறையானது மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

No comments:

Post a Comment