ஆசிரியர்களை மதிக்கின்ற சமூகமே தலைநிமிர்ந்து நிற்கும்
கல்வியாளர்கள் சங்கமம் விழாவில் புதியதலைமுறை ஆசிரியர் உதயசூரியன் பேச்சு..
கல்வியாளர்கள் சங்கமம் விழாவில் புதியதலைமுறை ஆசிரியர் உதயசூரியன் பேச்சு..
கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு ராமேஸ்வரத்தில் நடத்திய இதனால் சகலமானவர்களுக்கும் என்னும் மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களின் மேடை என்னும் தமிழக அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் சங்கமித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமுறைகள் உங்கள் கைகளில் என்னும் தலைப்பில் கலந்துரையாடிய புதியதலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமிகு.உதயசூரியன் இன்று தான் இந்த நிலைக்கு உயர்ந்த நிற்க காரணம் தனக்கு பாடம் போதித்த ஆசிரியர்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தன் வாழ்நாளில் தான் அமர்ந்திருந்த மேடைகளில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக இந்த கல்வியாளர்கள் சங்கமம் மேடையைக் கருதுவதாக குறிப்பிட்ட உதயசூரியன், தன்னலமில்லாமல் இந்த சமூகத்தை நேசிக்கும் ஆசிரியர்களால் மட்டுமே, ஒரு மாற்றம் குறித்து சிந்திக்க முடியும்.அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்புகின்ற முன்னெடுக்கின்ற ஆசிரியர்களின் சங்கமமாக இந்த கல்வியாளர்கள் சங்கமம் திகழ்கிறது என்பதை நேரில் பார்க்கையில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
கல்வி சமூகத்திற்கானது என்னும் குறிக்கோள் கொண்ட கல்வியாளர்கள் சங்கமத்துடன், சமூக விழிப்புணர்வு வார இதழாகத் திகழும் புதிய தலைமுறை இணைந்து பயணித்து நிச்சயமாக இந்த சமூகத்தை நல்ல பாதையில் முன்னெடுக்கும் பணிகளில் ஆசிரியர்களோடு இணைந்து நிற்கும் எனக்குறிப்பிட்டதோடு தமிழக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாற்றங்களின் நாயகன் என்னும் விருதையும், நம்பிக்கை 2019 என்னும் விருதையும் 30 ஆசிரியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
புதிய தலைமுறை ஆசிரியர் உதயசூரியன் , ஆசிரியர்களின் பெருமை மற்றும் மேன்மை குறித்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஆசிரியர்கள் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சிக்குரிய தருணமாக இருந்தது.
அனைத்து ஆசிரியர்களையும் பிரித்துப்பார்க்காமல் ஒன்றுசேர்க்கும் இதுபோன்ற நிகழ்வுகளை கல்வியாளர்கள் சங்கமம் மாவட்டம் முழுவதும் தொடர வேண்டும் என்பதே பங்கேற்ற ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment