அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 25, 2019

அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம்

அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம்
தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க  தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 

இதுதொடர்பாக  ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், அரசிடம் அதிகளவு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுநலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

தமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும், இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment