துறை தேர்வு தேதி மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 15, 2019

துறை தேர்வு தேதி மாற்றம்

துறை தேர்வு தேதி மாற்றம்

அரசு ஊழியர்களுக்கான, துறை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.அரசு ஊழியர் களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, தர நிலை தொடர்பாக, துறை தேர்வுகள் நடத்தப் படுகின்றன. வரும், 24 முதல், 31ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இந்த தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார். துறை தேர்வுகள், ஜூன், 8 முதல், 15 வரை நடத்தப்படும்.புதுடில்லி உட்பட, 33 தேர்வு மையங்களுக்கு, இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, ஜூன், 3 முதல், 15ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment