இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் பயிற்சி முடித்து 22 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 1, 2019

இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் பயிற்சி முடித்து 22 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள்

22 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் 1995 முதல் 97 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரிய பயிற்சி முடித்து மாவட்டம் முழுவதும் ஆசிரிய பணிபுரிந்து ஆசிரியர்களாக  22 ஆண்டுகள் கழித்து தாங்கள் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இன்று
ஒன்று சேர்ந்தனர்.

அவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளையும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு அன்பை  பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறையில் நின்று புகைப்படமும், தாங்கள் விளையாடிய இடங்களையும், மாணவ, மாணவியர் விடுதிகள் சுற்றிப் பார்த்தும் தங்களுடைய பழைய நினைவுகளை கூறி மகிழ்ந்தனர்.



அருகில் உள்ள தனியார் உணவகத்தில் பெரிய அறையில் உணவும் 
தாங்கள் பயின்ற போது இருந்த உடற்கல்வி  பேராசிரியர் வி.ஜி. மதனகோபாலன், கணித பேராசிரியர் எம். காமினி தேவி, வரலாறு பேராசிரியர் எஸ். ராஜேஸ்வரி, கலை மற்றும் பயிற்சி பேராசிரியர் ஆர். கருணாகரன் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில்  மீண்டும் அழைத்து அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவுபரிசும், சால்வை அணிவித்தும், மரியாதை செய்யப்பட்டது.

அன்றைய மாணவர்கள் இன்றைய ஆசிரியர்கள் பணியேற்று சுமார் 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் பயின்ற பேராசிரியர்களிடம் ஆசியும் பெற்றது காண்போரை நெகிழச் செய்தது. அவர்கள் ஓய்வு பெற்றும் அவர்களை நினைவுகூர்ந்து மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தியமைக்கு பேராசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்கள். பயிற்சி நிறுவன அலுவலக உதவியாளர் கங்கா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்து. இவ்விழாவினை முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தினர். நிகழ்ச்சியினை யுவராஜா, ஜோதி பிரபு, விஸ்வநாதன், முகுந்தன், லோகநாதன். செந்தில் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.

விழாவில் திருமால், சிவஜோதி, கோட்டி, தணிகைவேல், வேல்முருகன், தண்டபாணி, மூர்த்தி, முத்துக்குமரன், நித்தியானந்தன்,  சந்திரசேகர், கோபி, மோகனசுந்தரம், ஹரிஹரன், வேலு மற்றும் உமாபாய், மீனா, பழனியம்மாள், மீனா, பேபி, ஜெயமாலினி, கவிதா, கல்பனா, ஜெமின் சோனியா, அகிலா, கல்பனா, இந்துமதி, துளசி, கலைச்செல்வி, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜோதி பிரபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment