அனைத்து வகை தலைமையாசிரியர்களின் மேலான கவனத்திற்கு தங்கள் பள்ளியில் EMIS இணைய தளத்தில் உள்ள தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
Dashboard ல் இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக பதிவு செய்தல் வேண்டும், அதாவது
1. *School profile*
2. *Teachers profile*
3. *Student profile*
4. *Online services*
5. *Registers*
போன்ற தகவல்களை துல்லியமாக உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களையும், பள்ளியில் EMIS பணி மேற்கொள்ளும் ஆசிரியரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் அடையாள அட்டை போன்றவை இதன் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது
EMIS இல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப staff fixation செய்யப்பட உள்ளதால் அனைத்து விவரங்களும் துல்லியமாக இருக்குமாறு தலைமையாசிரியர்கள் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
அடுத்த கல்வி ஆண்டிற்கான Time table தற்போது திட்டமிட்டு தயார் செய்து EMIS ல் பதியப்பட வேண்டும் .
ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு இதில் உள்ள தகவலின் அடிப்படையில் நடைபெற உள்ளது எனவே தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இப்பணியினை விரைந்து முடித்திட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி உத்தரவிடப்படுகிறது.
அடுத்த வாரத்தில் EMIS சார்ந்த பணியினை மீளாய்வு செய்ய தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது . ஆகவே வரும் திங்கள் (13/05/2019) மாலைக்குள் இப்பணியினை சிறப்பு கவனம் செலுத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு
ஏதேனும் தகவல்கள் விடுபட்டாலோ, தவறுதலாக பதியப்பட்டாலோ பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவே துல்லியமான தகவலை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment