ஆன்லைன்' வழியே இட மாறுதல்
இனி, கல்வி மேலாண்மை இணைய தளமான, 'எமிஸ்' ஆன்லைனில் உள்ள தகவல்கள் அடிப்படையில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக காலியிடங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு வரும், 23ம் தேதி வரை, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஜூனில் நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கணக்கெடுப்புஇதற்கான முன்னேற்பாடாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களின் காலியிடங்களை, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதேபோல, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சுய விபரங்களையும், எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பங்கேற்றனர்.ஆலோசனையில், ஆசிரியர்களின் இடமாறுதல் குறித்தும், எமிஸ் தளத்தில் விபரங்களை பதிவு செய்வது குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் பணி காலியிடங்களை மறைக்காமல், அவற்றை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. முடிவு'இந்த ஆண்டு, ஆசிரி யர்களின் இடமாறுதல் கவுன்சிலிங், எமிஸ் இணையதளத்தில் உள்ள, ஆசிரியர்களின் விபரங்கள் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். காலியிடங்களும், அதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment