2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 22, 2019

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]
✍நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
 
✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்
✍housing loan - அசல் தொகையை Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.
✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.
✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)
✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).
✍80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]
 
✍மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)
✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.
✍கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.
✍நன்கொடை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.
✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%
✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.
✍Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/- வரை 87A ல் கழித்துக் கொள்ளலாம்.
 
Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
ஆக்கம் ....
த.சங்கர், M.Sc., B.Ed.,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
PUMS, அரிசிப்பாளையம்,
கொங்கணாபுரம் ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.

No comments:

Post a Comment