EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
STEP 1
ஒவ்வொரு ஆசிரியரும் *( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )*
தங்களுடைய *User Name மற்றும் Password*
தங்கள் தலைமையாசிரியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். தலைமையாசிரியர் TN EMIS இணையத்தளத்தில் சென்று Staff Details ஐ Click செய்து பின்னர் Teacher Login Details ஐ Click செய்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் Login விவரங்களை எடுக்க வேண்டும். அதனை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது Login Details ஐ பயன்படுத்தி EMIS இணையத்தளத்தில் Login செய்ய வேண்டும்.
STEP 2
ஆசிரியர் பற்றிய விவரங்கள் வரும் கடைசியாக இருக்கும் *Icon ஐ Click செய்தால் Performance Indicators என்ற தகவல் விவரங்கள் உள்ள தளத்தில் உள் நுழைய வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள்* தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தினை தெரிவு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.
STEP 3
8 parameter களுக்கும் விவரங்களை பதிவு செய்த பின்பு Save , Submit , Cancel என்ற மூன்று Option காட்டப்படும். அதில் ஆசிரியர்கள் கேள்விகளை ஓரளவிற்கு மட்டும் முடித்திருப்பின் Save Option உம் முழுவதுமாக முடித்திருப்பின் Submit Option உம் Click செய்ய வேண்டும். Save Option பயன்படுத்தினால் விடுப்பட்ட தகல்வல்களை / மாற்றங்களை தொடர்ந்து பதிவு செய்ய இயலும். *Submit Option ஐ பயன்படுத்தினால் மாற்றங்கள் செய்ய இயலாது*
STEP 4
தலைமையாசிரியர் ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கியும் *TN EMIS தளத்தில் சென்று Staff Details களத்தில் உள்ள PINDICS HM Evaluation க்கு நேராக உள்ள View Details தெரிவு செய்து ஆசிரியரின் சுய மதிப்பீடு விவரங்களை பார்த்தும் 8 அளவு கோல்களுக்கு தங்களின் மேலாய்வு மதிப்பீடுகளை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்
No comments:
Post a Comment