ஜன.6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 30, 2019

ஜன.6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஜன.6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். மேலும், ஜனவரி 6ம் தேதிக்கு பதிலாக வருகிற ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment