DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 17, 2019

DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு!

DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை
பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு!
சிறந்த அறிவியில் ஆசிரியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு எடுத்திடும் தகுதி வாய்ந்த சாதனைகள் புரிந்துள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர் . மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது .
இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் , மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன . இதற்கு விண்ணப்பித்திட மாதிரி விண்ணப்பப் படிவம் தொடர்பான விதிகள் www . sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தகவலினைத் தெரிவித்து சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது 2019 - 20 வழங்க ஏதுவாக அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் , பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு 5 பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தலைமை ஆசிரியர் , முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 15 . 09 . 2019 அன்று மாலை 5 . 30 மணிக்குள் இணைஇயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.
பார்வை 4 - ல் காணும் அறிவியல் நகரம் , உயர்கல்வித்துறை துணைத்தலைவர் அவர்களின் கடிதத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 - 12 - 2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு இத்தகவலினை தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 24 . 12 . 2019 அன்று மாலை 5 . 30 மணிக்குள் இணைஇயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment