பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 15, 2015

பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு!!!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்காக பள்ளிகளுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அந்த விடுமுறை நாள்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கவுள்ள நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரையாண்டுத் தேர்வு குறித்த மீளாய்வுக் கூட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஞானகெளரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர், அரசு விடுமுறை நாள்களில் பள்ளிகளை இயக்குவது சட்ட விரோதமானது. எனவே, பொங்கல் விடுமுறை மட்டுமின்றி எந்த ஒரு அரசு விடுமுறையின்போதும் பள்ளிகளை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். விதிகளை மீறி பள்ளிகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது என்ற சுற்றறிக்கையை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக கல்வித் துறை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment