தானாகவே தீ அணைக்கும் கருவி தேனி மாவட்ட மாணவன் கண்டுபிடிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 22, 2015

தானாகவே தீ அணைக்கும் கருவி தேனி மாவட்ட மாணவன் கண்டுபிடிப்பு.

கூடலூர்: ஏதாவது இடத்தில்தீ பிடித்தால் மொபைல் போன் மூலம் தகவல் அளிப்பதுடன், தானாக தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் கருவியை தேனி மாவட்டம், கூடலூர் என்.எஸ்.கே.பி.,பள்ளி மாணவர் ஜெகதீஷ் கண்டுபிடித்துள்ளார்.

தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலை, காஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கு போன்ற பகுதிகளில், திடீரென தீப்பிடித்து சேதங்கள் ஏற்படுகின்றன. ஒரு பகுதியில் தீப்பிடித்தவுடன், அங்கு வைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. தீ தகவல் தெரிவிப்பதுடன், மேலும் தீ பரவாமல் தடுக்க, தானாக தண்ணீர் தெளிக்கும் முறையை பழைய எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் மூலம் கூடலூர் என்.எஸ்.கே.பி.,பள்ளி 9 ம் வகுப்பு மாணவர் ஜெகதீஷ்கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தீ விபத்து பற்றி தீயணைப்புத்துறையினர் அறிந்து அவர்கள் வரும் முன் கூடுதல் சேதம் ஏற்படுகிறது. இதை தடுக்க தீப்பிடிக்கும் பகுதியில் தானாக தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடிக்க திட்டமிட்டேன். பழைய எலக்ட்ரானிக் கருவிகளில் உள்ள பாகங்களை இதற்கு பயன்படுத்தினேன். சென்சார்கள், ஏர் கம்பிரஷர்கள், டி.வி.டி.,யில் உள்ள சென்சார், அபாய விளக்கு, எச்சரிக்கை விடும் ஒலிப்பான், பேன் போன்றவை இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு இடத்தில் தீப்பிடித்து வெப்பம் அதிகரிக்கும் போது, அங்கு வைக்கப்பட்டிருக்கும் சென்சார் மூலம் உணர்ந்து, மொபைல்போன் மூலம் தீயணைப்புத்துறைக்கும், உரிமையாளருக்கும் தானாக தகவல் தெரிவிக்கும். பின்னர், அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் டியூப் மூலம் தண்ணீரை தானாக தெளிக்கும். இதன் மூலம் தீயை அணைப்பதுடன் மேலும் பரவாமல் தடுக்க முடியும், என்றார்.

No comments:

Post a Comment