இந்தியாவில் தான் பொது விடுமுறை அதிகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 19, 2015

இந்தியாவில் தான் பொது விடுமுறை அதிகம்

 உலகளவில், இந்தியாவில் தான், ஓர் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் அதிகம் என, ஆன் - லைன் பயண வலைதளம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இந்தியாவில், ஆண்டுக்கு, 21 நாட்கள் பொது விடுமுறை விடப்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், பொது விடுமுறையை பொறுத்தவரை, அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ் (18), சீனா (17), ஹாங்காங் (17), தாய்லாந்து (16), மலேசியா (15), வியட்னாம் (15), இந்தோனேஷியா (14), தைவான் (13), தென் கொரியா (13), சிங்கப்பூர் (11), ஆஸ்திரேலியா (10), நியூசிலாந்து (10) ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பாவில், சுவீடன் மற்றும் லிதுவேனியா நாடுகள், ஆண்டுக்கு, தலா, 15 நாட்கள் பொது விடுமுறை அளிக்கின்றன. லிதுவேனியா, கூடுதலாக, ஊதியத்துடன், 28 நாட்கள் விடுமுறை வழங்குகிறது. செகஸ்லோவேக்கியா 14 நாட்களும், ஆஸ்திரியா, பெல்ஜியம், நார்வேயில் தலா, 13 நாட்களும், பின்லாந்து, ரஷ்யாவில் தலா, 12 நாட்களும் பொது விடுமுறை அமலில் உள்ளன.ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகள், தலா எட்டு நாட்கள் விடுமுறை வழங்குகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தாண்டு, 11 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, மெக்சிகோவில் தான் மிகக் குறைவாக, அதாவது ஏழு நாட்கள் பொது விடுமுறை விடப்படுகிறது.

No comments:

Post a Comment