திண்டுக்கல்லில் அக்.17, 18-இல் பாஸ்போர்ட் சிறப்பு முகாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 13, 2015

திண்டுக்கல்லில் அக்.17, 18-இல் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்


பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக திண்டுக்கல்லில் அக்.17,18-ஆம் தேதிகளில் பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணிஸ்வரராஜா வெளியிட்ட செய்தி:
    பாஸ்போர்ட் சேவையை அனைத்துப் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் விடுமுறை நாள்களில் பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி திண்டுக்கல் புனித
மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அக்.17,18 ஆம் தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெறுகிறது.
    இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பாஸ்போர்ட் கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யும்போது, முகாம் இடம் என்ற இடத்தில் திண்டுக்கல் எனத் தேர்வு செய்ய வேண்டும். இந்த சிறப்பு முகாமில், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது. தட்கல், காவல் துறை தடையின்மைச் சான்றுக்கான விண்ணப்பங்களும் ஏற்கபடமாட்டாது.
முன்பதிவு செய்தவர்கள் விண்ணப்ப பதிவேட்டு எண்ணில் (ஏ.ஆர்.என்) குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாமில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை (அக்.13) பிற்பகல் 2 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம். தேவையான சான்றிதழ்கள் குறித்த விவரங்களை  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏஆர்என் படிவம், தேதியுடன் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே முகாமில் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்களின் கைரேகை, புகைப்படம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, சான்றிதழ்கள் கணினியின் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும். பாஸ்போர்ட் தொடர்பான பிற செயல்பாடுகள் அனைத்தும் மதுரையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்: சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளுக்கு வேலை, படிப்பு, புலம் பெயர்தலுக்காகச் செல்ல விரும்புவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் அக்.18 ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறும்.
   இதில் பாஸ்போர்ட், காவல், குடியுரிமை, வருமான வரி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விசா பெறும் நடைமுறை, மேற்படிப்புக்குச் செல்வோர் செய்ய வேண்டியவை, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரித் துறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment