சென்னையில், வரும் 17ம் தேதி, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, தண்டையார்பேட்டை, மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட் (எம்.பி.டி.,) விளையாட்டு அரங்கில், மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை, வரும் 17ம் தேதி நடத்துகின்றன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி படித்தவர்கள், பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்போர், தங்களது விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு, போக்குவரத்து வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 044 - -24615160 என்ற எண்ணில், அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முகாம் நடக்கவுள்ள இடத்தை, புதிதாக பதவி ஏற்ற, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment