2020 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி ஆசிரியர்கள் தேவை: யுனெஸ்கோ தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 5, 2015

2020 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி ஆசிரியர்கள் தேவை: யுனெஸ்கோ தகவல்

சர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறா முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பயிற்சி, குறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால், 10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment