மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.45 குறைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 2, 2015

மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.45 குறைப்பு

வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை வியாழக்கிழமை (அக்.1) முதல் ரூ.45 குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டு உபயோகத்துகான மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரூ.577-ஆக இருந்தது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அதன் விலை ரூ.532-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய எரிவாயு உருளையின் விலை ரூ.405.32-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நேரடி மானியத் திட்டத்தின் கீழ் புதிய விலையில் சமையல் எரிவாயு உருளை பெறுவோருக்கு வங்கிக் கணக்கில் ரூ.126.68 செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment