தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்த்தின் இணையவழி சேவை அனைத்தும் குறைந்த செலவில் கிடைக்கும் வகையில், தனது இணைய வழி விண்ணப்ப சேவையை, அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால்,அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கு வழங்கியுள்ளது.
முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ-சேவை மையங்களை அணுகலாம்.
இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
நிரந்தரப்பதிவு செய்ய- ரூ. 50/-
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க- ரூ 30/-
விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய-ரூ 5/-
விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற-ரூ. 20/-
தேர்வாணையத்திற்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக்கட்டணமான ரூபாய் 50/- மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக்கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment