மதுரையில் இன்று ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 26, 2015

மதுரையில் இன்று ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

மதுரை உள் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (அக். 26) நடைபெறுகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (நிலை 2) ஆகியோருக்கான இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்துக்குள் இட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். செனாய் நகரில் உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து மதுரை மாவட்டத்துக்கு பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (நிலை 2) ஆகியோருக்கான இடமாறுதல் கலந்தாய்வு இளங்கோ பள்ளியில் செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுகளில் முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment