இமயம் ஏறிய திண்டுக்கல் பள்ளி மாணவர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 9, 2015

இமயம் ஏறிய திண்டுக்கல் பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் அடங்கிய குழு, "கலாச்சாரம், தலைமைப் பண்பு' குறித்த அனுபவ பாடம் கற்க இமயமலை சென்று திரும்பியுள்ளன.இமயமலைப் பகுதியில் உள்ளது மவுண்ட் டியோ திபே பூங்கா. கடல் மட்ட உயரத்தில் 15 ஆயிரத்து 780 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை குளிர் வாட்டி வதைக்கும்.

இந்த இடத்திற்கு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியையை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 9 பேர், திட்ட அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ், பயிற்றுநர் ரொனால்டு ரிச்சர்டு உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு 13 நாள் பயணத்தை முடித்து திரும்பியுள்ளது.

செப்., 24ல் திண்டுக்கல்லில் இருந்து செப்.26ல் டில்லி சென்றடைந்த குழு, அங்கிருந்து, 2 ஆயிரத்து 700 கடல்மட்ட உயரத்திலுள்ள மணாலி பகுதியை செப். 27ல் அடைந்தது. பின், 470 மீட்டர் உயரமுள்ள "கணோல்' என்ற இடத்திற்கும், பின், மிக அதிக உயரமுள்ள "சிக்கா' என்ற இடத்தையும் அடைந்தது. செப். 29ல் மவுண்ட் டியோ திபா பூங்காவிற்கு சென்றனர்.

திட்ட அலுவலர் ஜேரோம் நிக்கோலஸ் கூறியதாவது: பள்ளிப் பருவத்தில் பல்வேறு சூழ்நிலைகளை அனுபவ பூர்வமாக மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். நாட்டில் நிலவும் வெவ்வேறான சூழ்நிலைகளை கிரகித்து பழகும்பண்பு, பிற மாநில கலாசாரம், விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல், பசுமையை பாதுகாத்தல் போன்ற பண்புகளை போதிக்கவே இந்த அனுபவப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பயண த்தின் போது 13 நாட்களிலும் மாணவர்களுக்கு ரொட்டி, சூப், டீ, சிறிதளவு சாதம் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. இருந்தாலும் மாணவர்கள் வெற்றிகரமாக இந்த பயணத்தை கடந்து வந்துவிட்டனர், என்றார்.

No comments:

Post a Comment