ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 3, 2015

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு

கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் மீது நடவடிக்கைக் கோரி, அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் வருகிற 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும், 6-ஆம் தேதி ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் செல்லவும், தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.


         மதுரை மாவட்டக் கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி, சென்னையில் ஆய்வுக் கூட்டத்தின்போது மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு, கருவூலக் கணக்குத் துறை இயக்குநரின் நெருக்கடியே காரணம் எனக் கூறி கருவூலக் கணக்குத் துறையினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

           இதைத் தொடர்ந்து, கருவூலக் கணக்குத் துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் முத்து சிலுப்பன் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முத்து சிலுப்பன் கூறியதாவது: மதுரை கூடுதல் கருவூல அலுவலர் இறப்புக்கு காரணமான கருவூலக் கணக்குத் துறை இயக்குநரை பணி இடைநீக்கம் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும். இயக்குநருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் நிலை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கருவூலக் கணக்குத் துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, வரும் திங்கள்கிழமை (அக்.5) அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் இரங்கல் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் வருகிற 6-ஆம் தேதி அனைத்து கருவூலத் துறை ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் சென்று, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment