ஜாக்டோ' போராட்டத்தால் கற்பித்தல் பணி பாதிப்பு: பெயரளவிற்கு செயல்பட்ட அரசு பள்ளிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 9, 2015

ஜாக்டோ' போராட்டத்தால் கற்பித்தல் பணி பாதிப்பு: பெயரளவிற்கு செயல்பட்ட அரசு பள்ளிகள்

ஜாக்டோ' சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆசிரியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று பள்ளிகளை மூடுவதை தவிர்த்து, வழக்கம் போல் செயல்பட செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சத்துணவு அமைப்பாளர்கள், பகுதிநேர ஓவியம், தையல், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் பள்ளிகளை திறந்தனர்.

தேனி பங்களாமேடு ஊராட்மி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியை ஊஞ்சாம்பட்டி பகுதிநேர ஓவிய ஆசிரியர் மூலம் பள்ளி செயல்படுத்தப்பட்டது. அங்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் பணிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது.

ஆர்பாட்டம்: தேனி கலெக்டர் அலுவலகம் முன் "ஜாக்டோ' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் ராஜா, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலர்கள் மோகன், பாண்டிதுரை, தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலர் முருகவேல், மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாகள் துரைப்பாண்டி, அம்மையப்பன், தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரி உள்பட பலர் பேசினர்.

"ஜாக்டோ' அமைப்பினர் கூறுகையில், "போராட்டத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிகள் திறந்தாலும் கல்வி பணி நடக்க வில்லை' என்றனர். தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில்,""மாவட்டத்தில் 767 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. எந்தப் பள்ளிகளும் மூடப்பட வில்லை,'' என்றார்.

பெரியகுளம்: தாலுகாவில் உள்ள 91 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்ல் 602 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் "ஜாக்டோ' சங்கத்தைச் சேர்ந்த 99 ஆசிரியர், ஆசிரியைகள் "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். 25 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 566 ஆசிரியர்களில், 104 ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு வரவில்லை. அப்பள்ளிகளில் பிற ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டன.

நன்றி: தின லர்

No comments:

Post a Comment