மாவட்ட கருவூல அலுவலக பணியாளர்கள் நேற்று தற்
செயல் விடுப்பு போராட்டம் செய்ததால், அலுவலக பணிகள் முற்றிலும் பாதித்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியம் பட்டுவாடா முதல் அனைத்து கருவூலம் சம்பந்தான
நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கருவூலர்களுக்கான மாதாந்திர கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. இங்கு, இயக்குனர் முனியநாதன் என்பவர் மதுரை கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி என்பவரை கடுமையாக பேசியுள்ளார். இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு, மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இவரது இறப்பிற்கு காரணமான இயக்குனர் முனியநாதனை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட கருவூலக கணக்கு துறை சங்கத்தினர், நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் மண்ணாங்கட்டி தலைமையில் ஊழியர்கள் 37 பேர் நேற்று ஒரு நாள் திடீரென தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
இதனால், கருவூலத்தில் நிர்வாக பணிகள் மட்டுமின்றி, கணினி துறையில் செயல்படும் அனைத்து சேவைகளும் பாதித்தது. மாவட்டத்தின் பல்வேறு கருவூல பணிகள் சம்பந்தமாக வந்த ஊழியர்கள், அலுவலகம் வெறிச்சோடியதால், ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment