மாணவர் ஆதார் அட்டை; ஆசிரியர்களே பொறுப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 14, 2015

மாணவர் ஆதார் அட்டை; ஆசிரியர்களே பொறுப்பு!

விடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதில், ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வித்துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை அதார் அட்டைகள் பெறாதவர்களில், 80 சதவீதம் பேர், 18 வயதிற்கு கீழ் உள்ள
மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட ரசீதுகள் இல்லை என்பதால் இதுவரை நடந்த பொது முகாம்களில் மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கான சிறப்பு முகாம் தற்போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெற்றுத்தருவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கலெக்டர் உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கு, ஆதார் அட்டை பெற சிறப்பு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆதார் திட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதிலும் மாணவர் பெயர் விடுபட்டது தெரிந்தால் ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment